Skip to main content

TNPSC  குரூப்  - 2 (INTERVIEW POST) தேர்வில் வெற்றி பெறுவது எப்படி ?
                முதலில் குரூப் - 2 (INTERVIEW POST) பற்றிய ஒரு முன்னோட்டம் காண்போம்.
கல்வித் தகுதி மற்றும் வயதுவரம்பு :
Ø  இளங்களைப் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Ø  இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது :
Ø  பொதுப்பிரிவினர்        -              18 -  30 வயதுவரை
Ø  SC/ST/BC/MBC                  -               18 -  உச்ச வயது வரம்பு கிடையாது
TNPSC குரூப் 2  (INTERVIEW POST) தேர்வில் உள்ள பணிகள் :
Ø  நகராட்சி ஆணையர் (Municipal Commissioner)
Ø  உதவி வணிகவரி அலுவலர் (Deputy Commercial Tax Officer)
Ø  துணை பதிவாளர் (Sub Registrar)
Ø  உதவி தொழில் ஆய்வாளர் (Assistant Inspector of Labour)
Ø  உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer)
Ø  இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (Junior Employment Officer)
Ø  வருவாய் உதவியாளர் (Revenue Inspector)

TNPSC குரூப் 2 (INTERVIEW POST) தேர்வு முறை  :
                குரூப் 2 தேர்வானது மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.
அவை :
                ஒன்றாம் நிலை            : முதல் நிலைத் தேர்வு (PRELIMINARY EXAM)
                இரண்டாம் நிலை        : முதன்மைத் தேர்வு (MAIN EXAM)
                மூன்றாம் நிலை           : நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு (INTERVIEW & RECORD)
முதல் நிலைத் தேர்வு :
                முதல் நிலைத் தேர்வில் கொள்குறி (OBJECTIVE TYPE)வினா வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
                இத்தேர்வில் மொத்த 200 வினாக்கள் இடம்பெறும்.
                ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
                இத்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாம் நிலையான முதன்மைத் தேர்விற்குச் செல்ல முடியும்.
முதன்மைத் தேர்வு :
                முதன்மைத் தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
                இத்தேர்வானது ஒரு பொது அறிவு தாள் (SINGLE PAPER) மட்டும் கொண்டது.
                இத்தேர்வில் கட்டுரை (ESSAY TYPE) வடிவில் விடைகளை எழுத வேண்டும்.
                இத்தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
நேர்காணல் :
                இந்நிலையில் உங்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்பு நடத்தப்படும்.
                இந்நிலையானது 40 மதிப்பெண்களைக் கொண்டது.
                இறுதியாக இரண்டாம் நிலை (முதன்மைத் தேர்வு) மற்றும் மூன்றாம் நிலையில் (நேர்காணல்) நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களுடைய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு,கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

பாடத்திட்டம் :
                தற்போது முதல்நிலைத் தேர்வில் இடம்பெறும் பாட்த்திட்டம் பற்றிக் காண்போம்.
                முன்னரே கூறியது போல்,முதல் நிலைத் தேர்வு என்பது 200 வினாக்களை உள்ளடக்கிய ஒரு கொள்குறி வகை தேர்வு ஆகும்.
200 வினாக்கள் இடம்பெறும் பாடத்திட்டம் :
                பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்     -               100 வினாக்கள்
                பொது அறிவு                                                                  -               50 வினாக்கள்
                திறனறிவு/கணிதம்                                                    -               25 வினாக்கள்
                நடப்பு நிகழ்வுகள்                                                         -               25 வினாக்கள்
இதில் பொது அறிவு பிரிவு உள்ளடக்கிய பாடங்கள் :
Ø  இந்திய அரசியலமைப்பு
Ø  இந்திய தேசிய இயக்கம்
Ø  புவியியல்
Ø  இந்தியப் பொருளாதாரம்
Ø  பொது அறிவியல்
Ø  இந்திய வரலாறு போன்றவை ஆகும்.

தேர்விற்கு எப்படி தயாராவது ?
                போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு(HARD WORK) வேண்டும் என்று கூறுவார்கள்.ஆனால் உண்மையில் கடின உழைப்பு தேவையில்லை மாறாக அறிவுத்திறம் சார்ந்த உழைப்பு (SMART WORK) தான் வேண்டும்.
அறிவுத்திறம் சார்ந்த உழைப்பு (SMART WORK) என்றால் என்ன ?
                அறிவுத்திறம் சார்ந்த உழைப்பு (SMART WORK)  என்பது எதைப் படிக்க வேண்டும் எதைப் படிக்கக் கூடாது,எப்படிப் படிக்க வேண்டும்,எந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும்,எந்தெந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உள்ளடக்கியது.

தேர்வில் வெற்றி பெற அறிவுத்திறம் சார்ந்த உழைப்பு(SMART WORK)  எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
                மேற்குறிப்பிட்டபடி பார்த்தீர்களேயானால்,பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம், திறனறிவு/கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என்ற மூன்று பிரிவுகள் மட்டுமே சுமார் 150 வினாக்களைக் கொண்டுள்ளது.
                ஆனால் பொது அறிவுப் பிரிவின் கீழ் இடம்பெறும் ஆறு பாடங்கள் 50 வினாக்களை மட்டுமே கொண்டுள்ளது.
                போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அதிகமானோர் பொதுதமிழ்/ஆங்கிலம் தவிர்த்து, 50 வினாக்கள் கொண்ட பொது அறிவுப் பிரிவிற்கு முக்கியத்துவம் அளித்து மற்ற இரு பிரிவுகளான கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.
                இது மிகவும் தவறான ஒன்றாகும்.ஏனெனில்,பொது அறிவுப் பிரிவின் கீழ் இடம்பெறும் அனைத்தும் மிக அதிக அளவிலான பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது.அதற்கு செலவிடும் நேரமும் அதிகம்.(அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது சிறிது கடினம்)
                ஆனால், மற்ற இரு பிரிவுகளான கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகளின் கீழ் சுமார் 10 முதல் 15 வரையிலான தலைப்புகள் மட்டுமே இடம்பெறும்.
                எனவே,நீங்கள் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பிரிவுகள் கணிதம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகும்.(இவை இரண்டிற்கும் அதிக அளவிலான PRACTICE தேவை)
                அதற்காக பொது அறிவுப் பாடத்தை படிக்காமல் இருக்கக் கூடாது.
தற்போது எந்தெந்த பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வரிசைப்படிக் காண்போம்.
1.       பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம்
2.       கணிதம்
3.       நடப்பு நிகழ்வுகள்
4.       பொது அறிவு
பொது அறிவுப் பிரிவில் எந்தெந்த பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வரிசைப்படிக் காண்போம். (படிப்பதற்கு எளிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)
1.       இந்திய அரசியலமைப்பு
2.       இந்திய தேசிய இயக்கம்
3.       புவியியல்
4.       இந்திய வரலாறு
5.       இந்தியப் பொருளாதாரம்
6.       பொது அறிவியல்
( மதிப்பெண் அடிப்படையில் பொது அறிவியலுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் )

மேற்கூறியவற்றிலிருந்து,
                பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம்,நடப்பு நிகழ்வுகள் மற்றும் கணிதம் போன்ற மூன்று பிரிவுகளை மட்டும்  நீங்கள் நன்றாக படித்தீர்கள் என்றால் கண்டிப்பாக 140 - 150 வினாக்களுக்கு உங்களால் விடையளிக்க முடியும்.
                பொது அறிவுப் பிரிவில் முக்கியத்துவத்தின் அடிப்படையில் படித்தீர்களேயானால் கண்டிப்பாக குறைந்தது 30 வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.
                மேற்கூறியவாறு நீங்கள் படித்தீர்களேயானால் கண்டிப்பாக 140 + 30 = 170 வினாக்களுக்கு முதல் நிலைத் தேர்வில் உங்களால் விடையளிக்க முடியும்.
                முந்தைய வருட தேர்வுகளின் தேர்ச்சி மதிப்பெண்கள் (CUT OFF) அடிப்படையில் பார்த்தோமானால் 125 - 140 வினாக்கள் சரியாக பதிலளித்தால் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
                எப்படியாயினும் மேற்கூறிய முறையில் நீங்கள் தேர்விற்கு தயாரானீர்களேயானால் கண்டிப்பாக முந்தைய வருடத்தைக் காட்டிலும் அதிகமாக கட் ஆப்   (CUT OFF) வந்தாலும் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.

அரசு அதிகாரி ஆவதற்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி.

செ.கார்த்திக்கேயன்
(சரித்திரம் IAS அகாடமி)
சின்னமனூர்.
தேனி மாவட்டம்.










Comments

Popular posts from this blog

தமிழ்நாடு இயற்கை அமைப்பு

தமிழ்நாடு இயற்கை அமைப்பு Ø   தமிழகம் 8 ° 5' வட அட்ச ரேகை முதல் 13 ° 35' வட அட்ச ரேகை வரையிலும் , 76 ° 15' கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80 ° 20 கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது. Ø   தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா , அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது. Ø   இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது. Ø   பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. Ø   தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.   Ø   தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. Ø   இந்தியாவில் 3-ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத் , இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்) Ø   தமிழகக் கடற்கரையானது 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. Ø   தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது. Ø   மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதி...

தமிழ் இலக்கணம் - அறிமுகம்

தமிழ் இலக்கணம் - அறிமுகம் தமிழ் ,   இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி. பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன. இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது. இலக்கியமும் இலக்கணமும் இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது , மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது. எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து , இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய   தேவையும் ஏற்பட்டது . இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால் , இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இலக்கண நூலை இயற்றுபவ...
TNPSC GROUP - II/IIA  TEST BATCH - 2021 - (BATCH - 2)  தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.  வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும்.  ஒவ்வொரு மாதிரித் தேர்விற்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் PDF புத்தகங்கள்(தமிழ்நாடு பாடபுத்தகங்கள்) பாட வாரியாக அனுப்பி வைக்கப்படும்.  ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின் PDF COPY அனுப்பப்படும். முன்பதிவிற்கு : https://forms.gle/T7MXKDZDbn3EwRTKA மாதிரித் தேர்வு :  தமிழ் மொழியில் : https://forms.gle/F6wkiMoVrbvrbDWS9 மாதிரித் தேர்வு :  ஆங்கில மொழியில் https://forms.gle/X4ndM88x5tFY2Hx99 மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – தமிழில் : https://drive.google.com/file/d/1ZPSP6iEZ9MkaRmVQsTCVBuCYXE9H-TfD/view?usp=sharing மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – ஆங்கிலம் : https://drive.google.com/file/d/1OFjhKC9m1pkdzbDOeevjSW9A_PUNpD1k/view?usp=sharing