Skip to main content

இந்திய அரசியலமைப்பு
INDIAN CONSTITUTION

முகப்புரை
(THE PREAMBLE)

இறையாண்மை கொண்ட சமதர்ம சமயச்சார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட உறுதி பூண்ட இந்திய மக்களாகிய நாம்,
அனைத்து குடிமக்களும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி
எண்ணத்தில் வெளிபடுத்தலில், நம்பிக்கையில் பற்றுறுதியில், வழிப்படுதலில் சுதந்திரம்
தகுநிலையிலும் வாய்ப்புரிமையிலும் சமநிலை பெறவும்
அதை அவர்கள் யாவரிடத்தும் மேம்படுத்தவும்
தனிநபர் கண்ணியம் மற்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு
கொண்ட சகோதரத்துவம் பெற்றிட உறுதி செய்து,
இந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள், நமது அரசமைப்பு அவையில் இந்த அரசமைப்புச் சட்டத்தை ஈங்கு ஏற்று, இயற்றி நமக்கு வழங்குகிறோம்.

·         இந்திய அரசமைப்பானது சட்ட முகப்புரையுடன் தொடங்குகிறது.
·         முகப்புரை என்னும் வார்த்தையனது அரசியலமைப்பின் அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கின்றது.
·         இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பண்டித ஜவஹகர்லால் நேரு அவர்களால் டிசம்பர் 13, 1946 அன்று வரைவு செய்யப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாக்க் கொண்டது.
முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள் :
இறையாண்மை : (Sovereign)
·         இறையாண்மை என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட அதிகாரத்தைக் குறிக்கின்றது.ஒருவரையும் தன்னை விட மேலான அதிகாரம் கொண்டவர் என்பதை ஏற்பதில்லை.அது தன்னுடைய விவகாரங்களை தானே நடத்துவதற்கு சுதந்திரம் பெற்றுள்ளது.
சமதர்மம் : (Socialist)
·         வருமானம், தகு நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் சம நிலையற்ற நிலையைப் போக்குவதும், வேலை செய்வோருக்குக் கௌரவமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதும் இதன் முக்கியமான நோக்கமாகும்.இவ்வாசகம் 1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டது.
மதச்சார்பின்மை : (Secular)
·         42 வது சட்ட திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டது.
·         இது எந்த ஒரு சமயத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதிலிருந்து அரசு விலகி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
மக்களாட்சி : (Democratic)
·         மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசு நடத்தப்பட வேண்டும்.மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் வரையில்தான் பதவி வகிக்க முடியும் என்பதை மக்களாட்சி என்ற சொல் உணர்த்துகிறது.
குடியரசு : (Republic)
·         இந்தியா, குடியரசுத் தலைவர் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையைக் கொண்டுள்ளது.
·         இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி மரபு வழி கிடையாது.
·         அனைத்து பொது அலுவலகங்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் திறக்கப்படும்.
நீதி : (Justice)
·         சமூக நீதி: (Social Justice) சாதி, நிறம், இனம், பாலினம், மதம், மொழி, அடிப்படையில் எந்தப் பாகுபாடும் கூடாது. அனைவருக்கும் சமமான மதிப்பு மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்படுதல்.
·         பொருளாதார நீதி: (Economic Justice) செல்வப் பங்கீடு மற்றும் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத்தரம் வழங்குதல்.
·         அரசியல் நீதி: (Political Justice) அனைத்து குடிமக்களுக்கும் சமமான அரசியல் உரிமை வழங்கப்படவேண்டும்,அரசாங்கத்தின் அனைத்து அரசியல் அலுவலகங்களையும் அணுக சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
தனியுரிமை : (Liberty)
·         இந்திய குடிமக்கள் தங்களின் எண்ணத்தில் சுதந்திரம், வெளிப்பாடு,நம்பிக்கை மற்றும் வழிபாடு, போன்றவற்றில் மீறல் ஏற்பட்டால் தங்கள் அடிப்படை உரிமைகளின் மூலம் நீதிமன்றத்தில் அணுகமுடியும்.
சமத்துவம் : (Equality)
·         எந்த பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
சகோதரத்துவம் : (Fraternity)
·         தனிநபர் மற்றும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கண்ணியம் போன்றவற்றை அனைவரும் மேம்படுத்தவும் மற்றும் மதிக்கவும் வேண்டும்.
முகப்புரை திருத்தம் :

1960 பெருபாரி யூனியன்(Berubari union) வழக்கு
·         முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் முகப்புரை முக்கியம்.
கேசவானந்த பாரதி(Kesavananda bharathi)(1973) மற்றும் எல்.ஐ.சி (1995)வழக்கு
முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். முகப்புரை 1976, 42 வது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம், ஒரே ஒரு முறை மட்டும் சட்டத்திருத்தம் செய்யப் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ்நாடு இயற்கை அமைப்பு

தமிழ்நாடு இயற்கை அமைப்பு Ø   தமிழகம் 8 ° 5' வட அட்ச ரேகை முதல் 13 ° 35' வட அட்ச ரேகை வரையிலும் , 76 ° 15' கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80 ° 20 கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது. Ø   தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா , அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது. Ø   இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது. Ø   பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. Ø   தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.   Ø   தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. Ø   இந்தியாவில் 3-ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத் , இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்) Ø   தமிழகக் கடற்கரையானது 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. Ø   தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது. Ø   மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதி...

தமிழ் இலக்கணம் - அறிமுகம்

தமிழ் இலக்கணம் - அறிமுகம் தமிழ் ,   இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி. பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன. இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது. இலக்கியமும் இலக்கணமும் இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது , மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது. எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து , இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய   தேவையும் ஏற்பட்டது . இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால் , இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இலக்கண நூலை இயற்றுபவ...
TNPSC GROUP - II/IIA  TEST BATCH - 2021 - (BATCH - 2)  தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.  வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும்.  ஒவ்வொரு மாதிரித் தேர்விற்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் PDF புத்தகங்கள்(தமிழ்நாடு பாடபுத்தகங்கள்) பாட வாரியாக அனுப்பி வைக்கப்படும்.  ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின் PDF COPY அனுப்பப்படும். முன்பதிவிற்கு : https://forms.gle/T7MXKDZDbn3EwRTKA மாதிரித் தேர்வு :  தமிழ் மொழியில் : https://forms.gle/F6wkiMoVrbvrbDWS9 மாதிரித் தேர்வு :  ஆங்கில மொழியில் https://forms.gle/X4ndM88x5tFY2Hx99 மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – தமிழில் : https://drive.google.com/file/d/1ZPSP6iEZ9MkaRmVQsTCVBuCYXE9H-TfD/view?usp=sharing மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – ஆங்கிலம் : https://drive.google.com/file/d/1OFjhKC9m1pkdzbDOeevjSW9A_PUNpD1k/view?usp=sharing