தமிழ்நாடு இயற்கை அமைப்பு
Ø தமிழகம் 8° 5' வட அட்ச ரேகை முதல் 13° 35' வட அட்ச ரேகை
வரையிலும், 76° 15' கிழக்கு தீர்க்க ரேகை
முதல் 80°20 கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக்
கிடக்கிறது.
Ø தெற்கு எல்லையான
கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா,
அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது.
Ø இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது.
Ø பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம்
விளங்குகிறது.
Ø தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு
1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.
Ø தமிழ்நாடு 1076 கி.மீ. நீள
கடற்கரையைக் கொண்டுள்ளது.
Ø இந்தியாவில் 3-ஆவது
நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத், இரண்டாவது
ஆந்திரப்பிரதேசம்)
Ø தமிழகக் கடற்கரையானது
2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
Ø தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது.
Ø மேற்கு மற்றும் வடமேற்குப்
பகுதிகளில் மேற்கு மலைத் தொடர்களாலும்,
கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றம் அதனை ஒட்டியுள்ள கிழக்கு
தொடர்ச்சி மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப்
பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.
வடக்கு
|
ஆந்திரமாநிலம்,கர்நாடக மாநிலம்
|
மேற்கு
|
கேரள
மாநிலம்
|
கிழக்கு
|
வங்காள
விரிகுடா
|
தெற்கு
|
இந்தியப்பெருங்கடல்
|
தமிழக எல்லை
முனைகள்
வடக்கு
|
புலிகாட்
ஏரி(பழவேற்காடு)
|
மேற்கு
|
ஆனைமலைக்
குன்றுகள்
|
கிழக்கு
|
கோடியக்கரை
|
தெற்கு
|
கன்னியாகுமரி
|
பொதுவாக
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அவை:
1. மலைகள்
2.
பீடபூமிகள்
3.
சமவெளிப்
பகுதிகள்
4. கடலோரப் பகுதிகள்
மலைப்பகுதி
:
Ø தமிழ்நாட்டின் மலைப்பகுதியை
இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்.
அவை
:
1. மேற்குத் தொடர்ச்சி
மலைப்பகுதிகள்
2. கிழக்குத் தொடர்ச்சி
மலைப்பகுதிகள்
Ø மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி
மலைகளும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில் இணைகின்றன.
Ø மேற்கு தொடர்ச்சி மலைகள்
மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப்பெற்ற ஒரே மாநிலம்
தமிழ்நாடு ஆகும்.
மேற்குத்
தொடர்ச்சி மலைகள்
Ø மேற்குக் கடற்கரைக்கு
இணையாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடற்கரையோரத்தில் படிகட்டுகளைப் போல்
அமைந்திருப்பதால், இதனை ஆங்கிலேயர் `மேலைப்படிகள்’ என்று அழைத்தனர்.
Ø தமிழ்நாட்டில் மேற்குத்
தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு
பரவியுள்ளது. இதன் சராசரி உயரம் 1000
மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உள்ளது.
Ø தொட்டபெட்டா (2620மீ) மற்றும் முக்கூர்த்தி
(2540மீ) ஆகியவை தமிழ்நாட்டில் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளது உயரமான
சிகரங்கள் ஆகும்.
தமிழகத்தில்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. நீலகிரி மலை
2.
ஆனை
மலை
3.
பழனி
மலை
4.
கொடைக்கானல்
குன்று
5.
குற்றால
மலை
6.
மகேந்திரகிரி
மலை
7.
அகத்தியர்
மலை
8.
ஏலக்காய்
மலை
9.
சிவகிரி
மலை
10. வருஷநாடு மலை
நீலகிரி
மலை :
Ø கடல் மட்டத்திலிருந்து சுமார்
1800-2400 மீட்டர் உயரத்தில் உள்ளது.
Ø இதன் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா
(2673 மீ). இதுவே தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரமாகும்.
Ø உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி ஆகியவை இதிலுள்ள முக்கிய கோடை வாழிடங்களாகும்.
ஆனை
மலை :
Ø ஆனை மலையின் உயர்ந்த சிகரம் ஆனை
முடி (2695மீ)
Ø இது தென்னிந்தியாவின் உயர்ந்த
சிகரமாகும்.
Ø இது பாலக்காட்டு கணவாயில்
உள்ளது.
பழனி
மலை :
Ø நீலகிரியிலிருந்தும், கேரளாவின் ஆனைமுடி
மலையிலிருந்தும் 1500 மீ முதல் 2000 மீ உயரத்தில் ஓர் கிளைத்தொடர் குன்று
கிழக்கு நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர்.
Ø பழனிமலை ஒரு தாழ்ந்த
குன்றாகும், பழனி மலைக்கு தெற்கில் ஏலக்காய் மலைகள் அமைந்துள்ளன.
Ø ஏலக்காய் மலையில் பெரியார்
ஏரிக்கு அருகில் தேக்கடி சரணாலயம் உள்ளது.
கொடைக்கானல்
மலை :
Ø கொடைக்கானல் மலை பழனி மலையின்
தொடர்ச்சியாகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
Ø கொடைக்கானலில் 12
ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கின்றது.
Ø பழனிக் குன்றுகளுக்கு தெற்கே
வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.
குற்றாலம்
மற்றும் மகேந்திரகிரி மலை :
Ø குற்றாலம் மற்றும்
மகேந்திரகிரி மலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன.
Ø பாலக்காட்டு கணவாய்க்கு
(25கி.மீ நீளம்) தெற்கே ஆண்டிப்பட்டி மலை,
ஏலமலை, அகத்தியர் மலை ஆகிய மலைகள்
காணப்படுகின்றன.
கம்பம்
பள்ளத்தாக்கு :
Ø ஏலமலைப் பகுதியில் செழிப்பான
கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
Ø ஆண்டிப்பட்டி குன்றுகளையும்
வருச நாட்டையும் கம்பம் பள்ளத்தாக்கு பிரிக்கின்றது.
செங்கோட்டை
கணவாய் :
Ø வருஷநாடு மலைக்கும் அகத்தியர்
மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகின்றது.
கிழக்குத்
தொடர்ச்சி மலைகள்
Ø மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு
ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக்
காணப்படுகின்றன.
Ø வடகிழக்கிலிருந்து
தென்மேற்காக வேலூர், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றன.
Ø இவற்றின் சராசரி உயரம் 1100
மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை உள்ளது.
தமிழ்நாட்டில்
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. ஜவ்வாது மலை
2.
கல்வராயன்
மலை
3.
சேர்வராயன்
மலை
4.
பச்சை
மலை
5.
கொல்லி
மலை
6.
ஏலகிரி
மலை
7.
செஞ்சி
மலை
8.
செயின்ட்தாமஸ்
குன்றுகள்
9.
பல்லாவரம்
10. வண்டலூர்
ஜவ்வாது
மலை :
Ø ஜவ்வாது மலை வேலூர்
மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Ø இங்குள்ள ஏலகிரி ஒரு
கோடை வாழிடமாகும்.
கல்வராயன்
மலை :
Ø இது விழுப்புரம்
மாவட்டத்தில் உள்ளது.
Ø இதில் வெள்ளாற்றின்
துணை ஆறுகள் உற்பத்தியாகின்றன.
சேர்வராயன்
மலை :
Ø இம்மலை சேலம் மாவட்டத்தில்
உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் சோலைக்காடு (1640மீ).
Ø இங்கு பாக்சைட்
தாதுக்கள் கிடைக்கின்றன.
Ø இம்மலையில் அமைந்துள்ள
ஏற்காடு ஒரு கோடை வாழிடமாகும்.
பச்சை
மலை :
Ø இது பெரம்பலூர்
மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Ø இங்கு உலகிலேயே முதல் தரமான கருப்பு
கருங்கல் கிடைக்கின்றது.
கொல்லி
மலை :
Ø இம்மலை நாமக்கல்
மாவட்டத்தில் உள்ளது.
Ø இங்கு பாக்சைட் தாது
கிடைக்கின்றது.
பாலமலைக்
குன்றுகள் :
Ø பச்சை மலை மற்றும் கொல்லி
மலைக்குக் கிழக்கில் பாலமலைக் குன்றுகள் காணப்படுகின்றன.
Ø இங்கும் கருங்கல் மற்றும்
கல்தூள்கள் கிடைக்கின்றன.
Ø கஞ்ச மலை மற்றும் சாக்குக்
குன்றுகள் ஆகியவை சேலம் பகுதியில் அமைந்துள்ளன.
Ø இவற்றிலிருந்து இரும்புத்தாது
மற்றும் மேக்னசைட் தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
Ø சித்தேரி மலை தருமபுரி
மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Ø சென்னிமலை ஈரோடு
மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு - முக்கிய குறிப்புகள்
தலைநகர்
|
சென்னை
|
பரப்பளவு
|
1,30,058 ச.கி.மீ
|
மாவட்டங்களின் எண்ணிக்கை
|
32
|
மாநகராட்சிகள் எண்ணிக்கை
|
10
|
சட்டமன்றம்
|
சட்டப்பேரவை மட்டும் (ஒரு அவை)
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை
|
234
|
சட்டமன்ற நியமன உறுப்பினர்
எண்ணிக்கை
|
1 (ஆங்கிலோ
இந்தியர்)
|
லோக் சபா உறுப்பினர் எண்ணிக்கை
|
39
|
ராஜ்ய சபா உறுப்பினர் எண்ணிக்கை
|
18
|
உயர்நீதி மன்றம் அமைந்துள்ள இடம்
|
சென்னை (கிளை மதுரை)
|
மொத்த கடற்கரை நீளம்
|
1076 கி.மீ
|
பெரிய துறைமுகங்கள்
|
3 (சென்னை, தூத்துக்குடி, எண்ணூர்)
|
விமான நிலையங்கள்
|
5
|
சர்வதேச விமான நிலையம்
|
சென்னை
|
முக்கிய ஆறுகள்
|
காவேரி, வைகை, தாமிரபரணி
|
பல்கைலக்கழகங்கள்
|
26
|
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
|
499
|
மருத்துவக் கல்லூரிகள்
|
19
|
பொறியியல் கல்லூரிகள்
|
275
|
காடுகளின் பரப்பளவு
|
22,877 ச.கி.மீ (17.58%)
|
ஆண்களின் ஆயுட்காலம் (2006 - 2011)
|
68.45 ஆண்டுகள்
|
பெண்ணின் ஆயுட்காலம் (2006 - 2011)
|
71.54 ஆண்டுகள்
|
தனிநபர் வருமானம் (at current price)
|
ரூ.37,635
|
தனிநபர் வருமானம் (at constant price)
|
ரூ.29,557
|
தமிழகத்தின்
சிறப்புகள்
உலகின் நீளமான கடற்கரை
|
மெரீனா 13 கி.மீ
|
மிக உயர்ந்த சிகரம்
|
தொட்டபெட்டா
|
மிக நீளமான ஆறு
|
காவிரி 760 கி.மீ
|
தமிழகத்தின் நுழைவாயில்
|
தூத்துக்குடி
|
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
|
கோயம்புத்தூர்
|
மலை வாசஸ்தலகங்களின் ராணி
|
உதகமண்டலம்
|
மிக உயரமான கொடி மரம்
|
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150 அடி)
|
மிகப்பெரிய கோயில்
|
தஞ்சை பெரிய கோயில்
|
தமிழக நெற்களஞ்சியம்
|
தஞ்சாவூர்
|
மிகப் பெரிய அணை
|
மேட்டூர் அணை
|
மிகப்பழமையான அணை
|
கல்லனை
|
மிகப்பெரிய மாவட்டம்
|
ஈரோடு(8,162 ச.கி.மீ)
|
மிகச்சிறிய மாவட்டம்
|
கன்னியாகுமரி
|
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்
|
சென்னை
|
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள
மாவட்டம்
|
சிவகங்கை
|
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்
|
சென்னை
|
மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம்
|
பெரம்பலூர்
|
மிக உயரமான கோபுரம்
|
திரு வில்லிபுத்தூர்
|
மிகப்பெரிய பாலம்
|
பாம்பன் பாலம்
|
மிகப்பெரிய தேர்
|
திருவாரூர் தேர்
|
கோயில் நகரம்
|
மதுரை
|
ஏரிகளின் மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
தென்னாட்டு கங்கை
|
காவிரி
|
மலைகளின் இளவரசி
|
வால்பாறை
|
மலைகளின் ராணி
|
நீலகிரி
|
தென்னிந்தியாவின் நுழைவாயில்
|
சென்னை
|
தமிழகத்தின் நுழைவாயில்
|
தூத்துக்குடி
|
மலைகளின் ராணி
|
உதகமண்டலம்
|
மலைகளின் இளவரசி
|
வால்பாறை
|
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
|
கோயம்புத்தூர்
|
ஆயிரம் கோயில்களின் நகரம்
|
காஞ்சிபுரம்
|
முக்கடல் சங்கமம்
|
கன்னியாகுமரி
|
தென்னிந்தியாவின் ஆபரணம்
|
ஏற்காடு
|
தென்னாட்டு கங்கை
|
காவிரி
|
தமிழ்நாட்டின் ஹாலிவுட்
|
கோடம்பாக்கம்
|
தமிழ்நாட்டின் ஹாலந்து
|
திண்டுக்கல்
|
தமிழ்நாட்டின் ஜப்பான்
|
சிவகாசி
|
ஏரிகள் நிறைந்த மாவட்டம்
|
காஞ்சிபுரம்
|
முத்து நகரம்
|
தூத்துக்குடி
|
மலைக்கோட்டை நகரம்
|
திருச்சி
|
நீளமான கடற்கரை
|
மெரீனா
|
நீளமான ஆறு
|
காவிரி
|
உயர்ந்த கோபுரம்
|
திருவில்லிபுத்தூர்
|
உயர்ந்த கொடிமரம்
|
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
|
மிகப்பெரிய மாவட்டம்
|
ஈரோடு
|
மிகப்பெரிய அணை
|
மேட்டூர்
|
மிகப்பெரிய கோயில்
|
தஞ்சை பெரிய கோயில்
|
மிகப்பெரிய பாலம்
|
பாம்பன் பாலம்
|
மிகப்பெரிய தொலைநோக்கி
|
காவனூர்
|
தமிழக மக்கள் தொகை - 2011
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்
|
சென்னை(46,81,087)
|
மக்கள் தொகை குறைவான மாவட்டம்
|
பெரம்பலூர்(5,64,511
|
மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள
மாவட்டம்
|
சென்னை(26,903)
|
மக்கள் தொகை நெருக்கம் குறைவான
மாவட்டம்
|
நீலகிரி(288)
|
மக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம்
|
காஞ்சிபுரம்(38.7%)
|
மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம்
|
நீலகிரி(3.6%)
|
எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம்
|
கன்னியாகுமரி(92.1%)
|
எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்
|
தருமபுரி(72.0%)
|
பெண்கள் எழுத்தறிவு அதிகமுள
மாவட்டம்
|
கன்னியாகுமரி(90.5%)
|
பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள
மாவட்டம்
|
தருமபுரி(60.05)
|
பாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம்
|
நீலகிரி(1041)
|
பாலின விகிதம் குறைவாக உள்ள
மாவட்டம்
|
தருமபுரி(946)
|
இந்திய மக்கள் தொகையில் தமிழகம்
|
7 வது இடத்தை
வகிக்கிறது
|
தமிழக மக்கள் தொகை
|
7,21,38,958
|
ஆண்கள்
|
3,61,58,871
|
பெண்கள்
|
3,59,80,087
|
பத்தாண்டு வளர்ச்சி விகிதம்
|
15.60
|
மக்கள் நெருக்கம்
|
555
|
பாலின விகிதம்
|
995
|
எழுத்தறிவு பெற்றவர்
|
5,24,13,116
|
ஆண்கள்
|
2,83,14,595
|
பெண்கள்
|
2,40,98,521
|
எழுத்தறிவு வீதம்
|
80.33
|
ஆண்கள்
|
86.81
|
பெண்கள்
|
73.86
|
தமிழகத்தின்
முதன்மைகள்
முதல் குடியரசுத் தலைவர்
|
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
|
முதல் து.குடியரசுத் தலைவர்
|
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
|
முதல் பெண் நீதிபதி
|
பத்மினி ஜேசுதுரை
|
முதல் பெண் மருத்துவர்
|
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
|
முதல் பெண் ஆளுநர்
|
பாத்திமா பீவி
|
முதல் பெண் முதலமைச்சர்
|
ஜானகி ராமச்சந்திரன்
|
முதல் பெண் தலைமைச் செயலாளர்
|
லட்சுமி பிரானேஷ்
|
முதல் பெண் கமாண்டோ
|
காளியம்மாள்
|
முதல் நாளிதழ்
|
மதராஸ் மெயில் (1873)
|
முதல் தமிழ் நாளிதழ்
|
சுதேசமித்திரன் (1829)
|
முதல் வானொலி நிலையம்
|
சென்னை (1930)
|
முதல் இருப்புப்பாதை
|
ராயபுரம் - வாலாஜா(1856)
|
முதல் வணிக வங்கி
|
மதராஸ் வங்கி (1831)
|
முதல் மாநகராட்சி
|
சென்னை (1688)
|
முதல் முதலமைச்சர்
|
ர.சுப்புராயலு ரெட்டியார்
|
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்
|
சர்.ராஜா முத்தையா செட்டியார்
|
சென்னை மாநகராட்சியின் முதல் துணை
மேயர்
|
எம்.பக்தவச்சலம்
|
சென்னை மாநகராட்சியின் முதல் பெண்
மேயர்
|
தாரா.செரியன்
|
சென்னை மாநகராட்சியின் முதல் பெண்
துணை.மேயர்
|
அகல்யா சந்தானம்
|
சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர்
|
சர்.பி.டி.தியாகராஜர்
|
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர்
|
சர்.சி.வி.இராமன்
|
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற
முதல் பெண்
|
எஸ்.விஜயலட்சுமி
|
முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
|
வசந்தகுமாரி
|
முதல் ஊமை படம்
|
கீசகவதம் (1916)
|
முதல் பேசும் படம்
|
காளிதாஸ் (1931)
|
முதல் நாவல்
|
பிரதாப முதலியார் சரித்திரம்
|
தமிழகத்திலுள்ள
மலைவாழிடங்கள்
Ø
ஊட்டி
Ø
கொடைக்கானல்
Ø
குன்னூர்
Ø
கோத்தகிரி
Ø
ஏற்காடு
Ø
ஏலகிரி
Ø
வால்பாறை
தமிழகத்திலுள்ள
கோட்டைகள்
அறந்தாங்கி கோட்டை
|
அறந்தாங்கி
|
திண்டுக்கல் கோட்டை
|
திண்டுக்கல்
|
ஜெல்டாரியா கோட்டை
|
பழவேற்காடு
|
செஞ்சிக் கோட்டை
|
செஞ்சி
|
மனோரா கோட்டை
|
தஞ்சாவூர்
|
ராஜகிரி கோட்டை
|
செஞ்சி
|
ரஞ்சன்குடி கோட்டை
|
பெரம்பலூர்
|
சங்ககிரி கோட்டை
|
சேலம்
|
புனித டேவிட் கோட்டை
|
கடலூர்
|
புனித ஜார்ஜ் கோட்டை
|
சென்னை
|
திருமயம் கோட்டை
|
புதுக்கோட்டை
|
உதயகிரிக்கோட்டை
|
நாகர்கோயில்
|
வட்டக்கோட்டை
|
கன்னியாகுமரி
|
வேலூர் கோட்டை
|
வேலூர்
|
தமிழகத்தின் புராதனச்சின்னங்கள்
தமிழகத்தின்
புராதனச்சின்னங்கள்
|
அறிவிக்கப்பட்ட
ஆண்டு
|
மாவட்டம்
|
மாமல்லபுரம் கோயில்கள்
|
1985
|
காஞ்சிபுரம்
|
தஞ்சை பெரிய கோயில்
|
1987
|
தஞ்சாவூர்
|
கங்கை கொண்ட சோழபுரம்
|
2004
|
அரியலூர்
|
ஐராவதீஸ்வரர் கோயில்
|
2004
|
தஞ்சாவூர்
|
நீலகிரி மலை ரயில்
|
2005
|
நீலகிரி
|
தமிழகத்திலுள்ள கணவாய்கள்
Ø
தால்காட்
கணவாய்
Ø
போர்காட்
கணவாய்
Ø
பாலக்காட்
கணவாய்
Ø
செங்கோட்டை
கணவாய்
Ø
ஆரல்வாய்க்கணவாய்
தமிழகத்தின் ஏரிகள்
அம்பத்தூர் ஏரி
|
சென்னை
|
பேரிஜம் ஏரி
|
கொடைக்கானல்
|
செம்பரம்பாக்கம்
|
காஞ்சிபுரம்
|
கழிவேலி ஏரி
|
விழுப்புரம்
|
கொடைக்கானல் ஏரி
|
கொடைக்கானல்
|
ஊட்டி ஏரி
|
உதகமண்டலம்
|
போரூர் ஏரி
|
சென்னை
|
பழவேற்காடு ஏரி
|
சென்னை
|
புழல் ஏரி
|
திருவள்ளூர்
|
சோழவரம் ஏரி
|
திருவள்ளூர்
|
சிங்காநல்லூர் ஏரி
|
கோயம்புத்தூர்
|
வாலாங்குளம் ஏரி
|
கோயம்புத்தூர்
|
வீராணம் ஏரி
|
கடலூர்
|
தமிழகத்தின்
நீர்மின் நிலையங்கள்
பைகாரா
|
நீலகிரி
|
குந்தா
|
நீலகிரி
|
மோயார்
|
நீலகிரி
|
ஆழியார்
|
கோயம்புத்தூர்
|
பரம்பிக்குளம்
|
கோயம்புத்தூர்
|
சோலையார்
|
கோயம்புத்தூர்
|
மேட்டூர்
|
சேலம்
|
பாபநாசம்
|
திருநெல்வேலி
|
கோதையார்
|
திருநெல்வேலி
|
பெரியார்
|
மதுரை
|
சுருளியார்
|
தேனி
|
தமிழகத்தின்
அனல்மின் நிலையங்கள்
நெய்வேலி
|
கடலூர்
|
மேட்டூர்
|
சேலம்
|
எண்ணுர்
|
திருவள்ளூர்
|
தூத்துக்குடி
|
தூத்துக்குடி
|
ஜெயங்கொண்டான்
|
அரியலூர்
|
தமிழகத்தின்
அணுமின் நிலையங்கள்
கல்பாக்கம்
|
காஞ்சிபுரம்
|
கூடங்குளம்
|
திருநெல்வேலி
|
துறைமுகங்கள்
பெரிய
துறைமுகங்கள்:
Ø
சென்னை
துறைமுகம்
Ø
எண்ணூர்
துறைமுகம்
Ø
தூத்துக்குடி
துறைமுகம்
நடுத்தர
துறைமுகம்:
Ø
நாகப்பட்டினம்
சிறிய
துறைமுகங்கள்:
Ø
இராமேஸ்வரம்
Ø
கன்னியாகுமரி
Ø
கடலூர்
Ø
கொளச்சல்
Ø
காரைக்கால்
Ø
பாம்பன்
Ø
வாலிநொக்கம்
தமிழக
கடற்கரை மாவட்டங்கள்
(வடக்கிலிருந்து
தெற்காக)
1. திருவள்ளூர்
2. சென்னை
3. காஞ்சிபுரம்
4. விழுப்புரம்
5. கடலூர்
6. நாகப்பட்டினம்
7. திருவாரூர்
8. தஞ்சாவூர்
9. புதுக்கோட்டை
10. இராமநாதபுரம்
11. தூத்துக்குடி
12. திருநெல்வேலி
13. கன்னியாகுமரி
தமிழ்நாட்டில்
உள்ள தேசிய பூங்காக்கள்
Ø முதுமலை தேசிய பூங்கா நீலகிரி
Ø கிண்டி தேசிய பூங்கா சென்னை
Ø மன்னார் வளைகுடா கடல் தேசிய
பூங்கா இராமநாதபுரம்
Ø இந்திராகாந்தி தேசிய பூங்கா
கோயம்புத்தூர்
Ø முக்குருத்தி தேசிய பூங்கா
நீலகிரி
தமிழகத்தில்
உள்ள யானைகள் சரணாலயம்
Ø நீலகிரி யானைகள் சரணாலயம் - 2003
Ø ஆனைமலை யானைகள் சரணாலயம் -
2003
Ø கோயம்புத்தூர் யானைகள்
சரணாலயம் - 2003
Ø ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள்
சரணாலயம் - 2002
Ø தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை - 1910
வனக்கொள்கையை
நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டங்கள்
Ø தமிழ்நாடு வனச்சட்டம் - 1882
Ø தமிழ்நாடு தனியார் காடுகள்
பாதுகாப்புச் சட்டம் -
1949
Ø தமிழ்நாடு மலைப்பகுதி மரங்கள்
பாதுகாப்பு சட்டம் - 1955
Ø வனவுயிரினப் பாதுகாப்புச்
சட்டம் - 1972
Ø தமிழ்நாடு வனப் பாதுகாப்புச்
சட்டம் - 1980
Ø பல்லுயிரினப் பரவல் சட்டம் - 2002
தமிழக
பல்கலைக்கழகங்கள்
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள
இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று
அழைக்கப்படுகின்றன
சென்னை பல்கலைக்கழகம்
|
சென்னை 1857
|
அண்ணாமலை பல்கலைக்கழகம்
|
சிதம்பரம் 1929
|
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
|
மதுரை 1966
|
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
|
கோயம்புத்தூர் 1971
|
காந்தி கிராமம் கிராமியப்
பல்கலைக்கழகம்
|
திண்டுக்கல் 1976
|
அண்ணா பல்கலைக்கழகம்
|
சென்னை 1978
|
தமிழ் பல்கலைக்கழகம்
|
தஞ்சாவூர் 1981
|
பாரதியார் பல்கலைக்கழகம்
|
கோயம்புத்தூர் 1982
|
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
|
திருச்சிராப்பள்ளி 1982
|
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
|
கொடைக்கானல் 1984
|
அழகப்பா பல்கலைக்கழகம்
|
காரக்குடி 1985
|
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக்கழகம்
|
சென்னை 1987
|
அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல்
மற்றும் உயர்கல்வி நிறுவனம்
|
கோயம்புத்தூர் 1988
|
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகம்
|
சென்னை 1989
|
மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம்
|
திருநெல்வேலி 1990
|
தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார்
சட்டப் பல்கலைகழகம்
|
சென்னை 1997
|
பெரியார் பல்கலைக்கழகம்
|
சேலம் 1997
|
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
|
வேலூர் 2002
|
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
|
சென்னை 2002
|
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும்
விளையாட்டுப் பல்கலைக்கழகம்
|
சென்னை 2005
|
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
|
தஞ்சாவூர் 2007
|
அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
|
சென்னை 2007
|
அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
|
கோயம்புத்தூர் 2007
|
அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
|
திருச்சிராப்பள்ளி 2007
|
அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
|
திருநெல்வேலி 2007
|
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம்
|
சென்னை 2008
|
மத்திய கடல்சார் பல்கலைக்கழகம்
|
சென்னை 2008
|
மத்திய பல்கலைக்கழகம்
|
திருவாரூர் 2009
|
அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகம்
|
மதுரை 2010
|
தமிழகத்தில்
உள்ள மத்திய அரசு நிறுவனங்கள்
தேசிய தொழில்நுட்பக் கழகம் NIT
|
திருச்சி
|
இந்திய தொழில்நுட்பக் கழகம் IIT
|
சென்னை
|
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் CLRI
|
சென்னை
|
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம்
|
சென்னை
|
மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி
நிலையம்
|
சென்னை
|
தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் NIOT
|
சென்னை
|
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி
நிலையம் CECRI
|
காரைக்குடி
|
காடு ஆராய்ச்சி நிறுவனம்
|
கோயம்புத்தூர்
|
சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய
ஜவுளி மேலாண்மை கல்வி நிறுவனம்
|
கோயம்புத்தூர்
|
மத்திய கடல் சார் உயிரினங்களின்
வளர்ப்பு நிலையம்
|
மண்டபம் கேம்ப்
|
இந்திய மேலாண்மைக் கழகம் IIM
|
திருச்சி 2011
|
அஞ்சல்
மண்டலங்கள்
தமிழ்நாட்டில்
நான்கு அஞ்சல் மண்டலங்கள்
அஞ்சல் மண்டலங்கள்
|
தலைமை இடம்
|
சென்னை
|
சென்னை
|
மேற்கு மண்டலம்
|
கோயம்புத்தூர்
|
மத்திய மண்டலம்
|
திருச்சி
|
தெற்கு மண்டலம்
|
மதுரை
|
தமிழ்நாட்டிலுள்ள
அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை - 12,
115
அஞ்சல்
மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை - 3, 504
Comments
Post a Comment
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது.......