தமிழ் இலக்கணம் - அறிமுகம் தமிழ் , இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி. பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன. இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது. இலக்கியமும் இலக்கணமும் இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது , மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது. எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து , இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய தேவையும் ஏற்பட்டது . இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால் , இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இலக்கண நூலை இயற்றுபவ...
சரித்திரத்தில் தேர்ச்சி கொள்...!